Saturday 5 May 2012

மீண்டும் எனக்குள் தனிமை...


உறவொன்று பிரிந்தது...
தனிமை தேடி வந்தது...
யாருமில்லா நேரங்களில்
ஏக்கங்களோடு தனித்திருக்கிறேன்...
தேவை எதுவென்று நானாய் உணர்ந்துமிருக்கிறேன்...

தனிமையை நான் நேசிக்க துவங்கியதும்
உறவுகள் தேடி வந்தன...
எனக்கு பிடித்ததாய் எண்ணிக்கொண்டு
ஏதேதோ செய்கின்றனர்
என்ன வேண்டுமென கேட்காமலே...

யாருமில்லா நேரங்களில்
ஏக்கங்களோடு தனித்திருந்த தருணங்களும்
தேவைகள் இன்னதென்று
உணர்ந்து கொண்ட தருணமும்
உணர்வுகள் கலந்து முற்றுப் பெற துடித்தன...
 
செத்துவிட முயலும் உடலுக்குள்
வாழ்ந்து விட துடிக்குது மனசு
உணர்ந்து விட்ட உலகத்தை
நேசிக்க துவங்கியதன் விளைவு
மீண்டும் எனக்குள் தனிமை...

2 comments:

  1. சுவாசமாய் தொடர்வேன்...!கவிதையில், கவிதையின் குணாம்சங்களைக் கவித்துவமாகவும் சூசகமாகவும் உணர்த்திச் செல்கிறார்.கவிதைக்கும் காதலுக்கும் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு கவிதை… யாரடா நீ..................? உணர்ச்சிகளின் மேலோட்டத் துள்ளல் எங்கும் இல்லை. உணர்வுகளில் நிலைகொண்ட கவிதைகாதலும் முதல் முத்தமும்...! செறிவான கவிதையமைப்பு, கவனத்துடன் கூடிய சொற்களின் கட்டமைப்பு பெற்றவளை பெற்றவள்...! ‘புதைமணலில் ஒரு கால் சிக்கியிருக்க வானத்தை அளக்க / மறுகாலை உயர்த்துவதே கவிதை ...அது..அன்னையின் பொம்மை...என்னில் நீ என்றும் நானாய்... கவிதையின் வீரியமும்,அழகியலும்,சிந்தனைவீச்சும் அடுத்த கவிதைக்கு கண்கள் நகர விடாமல் தடுத்துவிட்டன.இந்தத் தொகுப்பிலுள்ல மிக நல்ல கவிதைகளில் ஒன்று:மீண்டும் எனக்குள் தனிமை...

    உறக்கத்தில் புன்னகைக்கும் காதலி போல, இரவுப்பயணத்தில் தோள் சாயும் மனைவி போல, வருடங்கள் பல கழிந்த பின்பொழுதொன்றில் யதேச்சையாக பார்க்க நேர்ந்துவிடுகிற அம்மாவின் புடவையை போல காயத்ரி தேவியின் கவிதையும் அதிஅற்புதமானதுதான். பேரழகானதுதான். உருவமற்று எப்போதும் உடனிருக்கும் தோழமைதான்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்து கவிதைகளையும் ஒரு சேர விமர்சித்த விதம் அழகு அண்ணா

      Delete